search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஸ்டர் தின நள்ளிரவு திருப்பலியில் புதிய ஒளி ஏற்றப்பட்ட மெழுகுத்திரியுடன் அருட்தந்தையர்கள்
    X
    ஈஸ்டர் தின நள்ளிரவு திருப்பலியில் புதிய ஒளி ஏற்றப்பட்ட மெழுகுத்திரியுடன் அருட்தந்தையர்கள்

    ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு திருப்பலி

    பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள புகழ் பெற்ற பூண்டிமாதா பேராலயத்தில் இயேசு நாதர் உயிர்த் தெழுந்ததை குறிக்கும் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலி நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்கியது. பேராலயத்தின் முகப்பில் இருந்து பெரிய மெழுகு திரியில் புதிய ஒளி ஏற்றப்பட்டது. பெரிய மெழுகு திரியில் நடப்பு ஆண்டு 2022 பொறிக்கப்பட்டு இருந்தது. மெழுகு திரியில் கிறிஸ்துவின் 5 காயங்களை குறிக்கும் வகையில் 5 மணிகள் பதிக்கப்பட்டன.

    ஒளியேற்றப்பட்ட மெழுகு திரியை கைகளில் ஏந்தி பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் அருட்-தந்தையர்கள் கிறிஸ்துவின் ஒளி இதோ என பாடிக் கொண்டே மேடைக்கு வந்து மெழுகு திரியை அதற்குரிய பீடத்தில் வைத்தனர். பெரிய மெழுகு-திரியில் பேராலயத்தில் குழுமி இருந்தவர்கள் வைத்து இருந்த மெழுகு திரிகளில் ஒளியேற்றி கைகளில் வைத்திருந்தனர். இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை பேராலய அதிபர் பாக்கியசாமி அறிவித்து திருப்பலி நிறைவேற்றினார்.

    திருப்பலியில் பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குநர் சாம்சன், உதவிப் பங்கு தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தையர்கள் அருளாநந்தம் ஆகியோர்கலந்து கொண்டனர். இன்று காலை, முற்பகல், மாலை பூண்டிமாதா பேராலயத்தில் ஈஸ்டர் தின சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 

    கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் நள்ளிரவு திருப்பலியின்போது பூண்டி மாதா பேராலய வளாகம் முழுவதும் திரளான பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர். சாம்பல் புதன் நாளில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஈஸ்டர் தினத்துடன் நிறைவடைந்தது.

    Next Story
    ×