
ஆண்டிபட்டி:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் கடமானூத்து, விருமானூத்து பகுதிகள் உள்ளன. மலைப்பகுதியில் மரங்களின் வேர்பகுதியில் வரும் வற்றாத சுனைநீர் கருப்பசாமி, கன்னிமார்கோவில் ஆகியவையும் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழிபாடுகள் குறித்து அறியும்படி உள்ளன. சில கி.மீ. சுற்றளவில் பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு கற்களால் ஆன கோட்டைவாசல் உள்ளது.
மிகப்பழமையான சின்னங்கள் குறித்து இப்பகுதி மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. மலைப்பகுதியில் அத்திமரத்தின் வேர் பகுதியில் இருந்து வரும் சுனைநீர் எந்தக் காலத்திலும் வற்றுவதில்லை.
சுனை அருகே அமைந்த கோவில்கள் எந்த காலத்தில் உருவானவை என தெரியவில்லை. சில இடங்களில் கல்வெட்டுகள் உள்ளது. தொல்லியல் துறை இப்பகுதியில் ஆய்வு செய்தால் பழங்கால நினைவுச் சின்னங்கள் குறித்து தெரியவரும்.