
பட்டுக்கோட்டை அருகில் உள்ள சஞ்சாயநகரில்அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு உயிர் நீத்த சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் இரவு 9 மணியளவில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் திருச்சடங்கு-களும் நடைபெற்றது.
முன்ன-தாக இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் எடுத்துச்சென்று ஊர்வ-லமாக ஊரின் முக்கிய பகுதிகள் வழியாக தஞ்சை சாலை சென்று மீண்டும் ஊருக்குள் வந்து முடிவில் சுசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர்.
பின்னர் பங்குத் தந்தைகள் முன்னிலையில் அங்கு திருசடங்குகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.