search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் உப்பு சத்தியாக்கிரக நினைவு பாத யாத்திரை தொடக்கம்.
    X
    காங்கிரஸ் கட்சியின் உப்பு சத்தியாக்கிரக நினைவு பாத யாத்திரை தொடக்கம்.

    உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை தொடங்கியது.
    பூதலூர்:

    தமிழகத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து நடைபயணமாக வேதாரண்யத்திற்கு சென்று உப்பு எடுக்கும் போராட்டம் நடை-பெற்றது.

     இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையிலும் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆவது ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டதன் பேரில், உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை திருச்சியிலிருந்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி .தங்கபாலு தலைமையில் தொடங்கியது.

    இக்குழுவினர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தனர். கல்லணை--யில் உள்ள பயணியர் மாளிகை திறந்தவெளியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர் . அம்பேத்கர் படத்தை வைத்து அதற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் கல்லணையில் இருந்து தொடங்கிய பாத யாத்திரையில் பாதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் காங்கிரஸ் மாநில பொதுச்--செயலாளர் பொன்-கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநா-தன், பூத--லூர் ஒன்றிய தலைவர்கள் அறிவழகன், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     
    திருக்காட்டுப்பள்ளியில் தங்கும் உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவையாறு வழியாக செல்கின்றனர்.
    Next Story
    ×