search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    புனித செபஸ்தியார் ஆலய விழா

    பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நடைபெற்றது.
    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை-மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் திருவிழா வருகிற 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுறது.

    ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கு ஞாயிறுக்குப் பிறகு வரும் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் 3 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பல ஊர்களில் இருந்து எண்ணற்ற மக்கள் திருவிழாவிற்கு வருகை

    புரிந்து புனிதரின் ஆசிரை பெற்று செல்வார்கள்.

    இத்திருவிழாவில் 5 தேர்கள் பவனி வருகின்றது. காவல் சம்மனசு, புனித சூசையப்பா, உயிர்த்த இயேசு, மாதா சுருப்பங்கள் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நான்கு வீதிகளில்

    வருவது கண்-கொள்ளா காட்சியாக இருக்கும். ஜாதி, மதம், மொழி என்று பாராமல் எல்லா மக்களும் இத்திரு-விழாவில் கலந்து கொள்-கிறார்கள்.
     
    திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் 18&ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் குடந்தை மறைமா-வட்ட முதன்மை குரு தேவதாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று

    இரவு 8 மணி அளவில் குடந்தை பெஸ்கி கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி-களும், இரவு 10 மணி அளவில் மின் அலங்கார தேர்பவனியும் நடக்கிறது.
     
    இரண்டாவது நாள் 19&ஆம் தேதியில் செவ்வாய்க்-கிழமை காலை, மதியம் அருள் தந்தையர்களால் திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணி அளவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி

    தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. இரவு 8:30 மணி அளவில் பாஸ்டின் கலைக் குழுவி-னரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு வாணவேடிக்கை முழங்கிட மனங் கமழும் மலர்கள் மற்றும் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனி விடிய விடிய நடைபெறுகிறது. அது சமயம் பாபநாசம் சி. ஏ. குமாரின்

    பேண்டு இசை நடக்கிறது. மூன்றாவது நாள் புதன்கிழமை காலை 6:30 மணி அளவில் குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.
     
    அதனைத் தொடர்ந்து காலை, மதியம், மாலை அருள் தந்தையர்களால் திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 5:30 மணி அளவில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்த-லத்தின் பங்குத்தந்தை கோஸ் மான் ஆரோக்கிய ராஜ், இணை பங்கு தந்தை சின்னப்பன், உபதேசியர்கள் அடைக்கலம், பாபு, பங்கு பேரவை செயலாளர் அமிர்தராஜ், நல்லாசிரியர் ஜோசப், நாட்டாமைகள் அருள் கென்னடி, செல்வ-ராஜ் மற்றும் அருட் சகோதரர், அருள் சகோதரிகள், பங்கு பேரவை, அன்பியங்கள், பங்கு இறைமக்கள், பங்கு கிளை கிராம இறைமக்கள் செய்துள்-ளனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×