
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை வெகுவாக குறைந்துவிட்டது.
நேற்று மணிமுத்தாறு அணைப் பகுதி மற்றும் கன்னடியன் பகுதிகளில் லேசான மழை பெய்தது. மற்ற அணை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதிகபட்சமாக மணிமுத்-தாறில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தற்போது நிலவரப்படி 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 24.50 அடி நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு 33 கன அடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் 54 புள்ளி 25 அடி சேர்வலாறு அணையில் 66.47 அடியும் நீர் இருப்பு உள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கோடை மழை காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 4 நாட்கள் விடுமுறை என்பதால் கார், வேன்களில் சென்று குடும்பமாக குளித்து மகிழ்ந்தனர்.