என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவாரூர் கோவில், அண்ணாமலை
  X
  திருவாரூர் கோவில், அண்ணாமலை

  திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை மாற்றம் செய்ய தமிழக பாஜக எதிர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூர் தெற்கு ரத வீதியின் பெயரை கருணாநிதி என்ற பெயரில் மாற்றாமல், மரபு வழிப் பெயர் தொடர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மாநில பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
  சென்னை:

  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

  திமுக தொடர்ந்து  தமிழர்களின் மரபுகளையும்,  மாண்புகளையும், மதிக்கத்தக்க புராதன நினைவுச் சின்னங்களையும் வேரோடு அழிப்பதை தன் வேலையாக கொண்டு செயல்படுவது, தமிழக மக்களை மிகவும் புண்படுத்துகிறது.

  தமிழக அரசின் பாட நூலில், ஔவையார் அகர வரிசைப்படி,  அருளி செய்த கொன்றை வேந்தன் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளது.
   
  அன்னையும் பிதாவும், முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று  எழுதுவதற்கு பதிலாக அகர வரிசைகளை சிதைத்து, விருப்பம் போல் மாற்றி, அன்னையும் பிதாவும், முன்னறி தெய்வம் என்பதற்கு அடுத்தபடியாக, ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு என்று கொன்றை வேந்தன் தொடர்கிறது. 

  ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற பதிவுகளை நீக்குவதற்கு 
  அதிகாரம் தந்தது யார்? ஊருடன் பகைக்கின் என்று எழுதுவதற்கு பதிலாக ஊக்கமுடைமை ஆக்கம் கொடுக்கும் என்று கொன்றை வேந்தனில் இல்லாத சொந்த வரிகளை இணைக்கச் சொல்லியது யார்?

  தொன்மையான தமிழர் மரபுகளையும், மென்மையான தமிழ் இலக்கிய மரபுகளையும் சிதைப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை தந்தது? 

  தமிழகத்தின் மிக தொன்மை வாய்ந்த புகழ் பெற்ற புண்ணியத் தலம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவில்.  

  இங்குள்ள தெற்கு ரத வீதியின் பெயரை டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

  இறை நம்பிக்கையற்ற மனிதர் பெயரை எதற்காக திருக்கோவிலின் தேர் உலா வரும் தெருக்களில் ஒன்றுக்கு வைக்க வேண்டும். 

  டாக்டர் கலைஞர் சாலை என்ற பெயர் சூட்ட விரும்பினால், திருவாரூரில் வேறு தெருக்கள் இல்லையா, தமிழர்களின் கடவுள் பக்தியை, இறை நம்பிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள். 

  திருவாரூர் தெற்கு ரத வீதியின் பெயரை கருணாநிதி என்ற பெயரில் மாற்றுவதற்கு தமிழக மக்களின் சார்பிலும் எங்கள் எதிர்ப்பினை பதிவு செய்கிறோம்.

  தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ  சுவாமிகளின் திருக்கோவில், தெற்கு ரத வீதியின் பெயரை மாற்றாது மரபு வழி  அதே பெயர் தொடர்ந்து இருக்க ஆவன செய்ய வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  Next Story
  ×