search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணசாமி கோவில்  தேரோட்டம்
    X
    கிருஷ்ணசாமி கோவில் தேரோட்டம்

    கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் - பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் வாகன பவனி, இன்னிசை பட்டிமன்றம், மங்கள இசை சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையடுத்து கோவிலில் இருந்து கிருஷ்ணர், பாமா, ருக்மணி ஆகியோர் தேருக்கு எழுந்தருளினார்கள். இதை தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
     
    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. 

    தேரோட்ட விழாவில் அறநிலையத்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், சுனில்குமார், மண்டல தலைவர் அஜித்குமார் மற்றும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    இன்று இரவு 7 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு சப்தவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான நாளை (16-ந் தேதி) காலை 11 மணிக்கு அன்னதானமும் மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனியும், முத்து குடையுடன் யானை பவனியும் நடக்கிறது.

    பின்னர் ஆராட்டு  பூஜை, மெல்லிசை மற்றும் இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.
    Next Story
    ×