search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்மழை காரணமாக பாலருவியில் அதிகமாக தண்ணீர் கொட்டுவதை படத்தில் காணலாம்.
    X
    தொடர்மழை காரணமாக பாலருவியில் அதிகமாக தண்ணீர் கொட்டுவதை படத்தில் காணலாம்.

    தொடர் மழை காரணமாக பாலருவியில் கொட்டும் தண்ணீர்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையதல் பாலருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
    செங்கோட்டை:

    ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது பாலருவி. அடர்ந்த வனப்பகுதியில் 300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் தொடர்மழையால் காய்ச்சிய வெள்ளியை உருக்கியது போல் விழும் இந்த நீர்வீழ்ச்சியை பார்போரை பிரமிக்க வைக்கும். 

    பல்வேறு மூலிகைகளை சுமந்து வருவதால் ஏராளமானோர் குளித்து செல்வார்கள்.

     மேலும் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பான குளியலை விரும்பி குற்றாலம் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் பாலருவிக்கு வருகை தருவர்.

    செங்கோட்டையிலிருந்து பாலருவிக்கு சுமார் 30கி.மீ தொலைவில் அமைந்து இருக்கும் அருவிக்கு செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் வழியாக ஆரியங்காவு பாலருவியை காண செல்ல வேண்டும். கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சூட்டெரித்ததையடுத்து பாலருவி வறண்டதால் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது கேரளாவில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததையடுத்து பாலருவில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணபடுவதால் கேரளா அரசு தற்போது பாலருவியில் குளிக்க அனுமதியளித்துள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆனந்த குளியல் போட்டு செல்கிறார்கள்.
    Next Story
    ×