என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
ஆறுமுகநேரியில் மது விற்றவர் கைது
ஆறுமுகநேரியில் மதுவிற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது திருச்செந்தூர் சாலை முத்துகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் அங்கிருந்து ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ராஜமணியபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 56) என்பதும் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களையும் கைப்பற்றினர்.
Next Story