search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காம்பவுண்டு சுவர் இடிந்து கிடக்கும் காட்சி.
    X
    காம்பவுண்டு சுவர் இடிந்து கிடக்கும் காட்சி.

    மழைக்கு காம்பவுண்டு சுவர் இடிந்தது- சங்ககிரி கிளை சிறை கைதிகள் 9 பேர் சேலம் ஜெயிலுக்கு மாற்றம்

    மழைக்கு காம்பவுண்டு சுவர் இடிந்ததால் சங்ககிரி கிளை சிறை கைதிகள் 9 பேர் சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர்.
    சங்ககிரி:

    சங்ககிரி கிளை சிறைச்சாலை ஆங்கிலேயர் காலத்தில் 1910-ம் ஆண்டு கட்டப்பட்டு அன்று முதல் கிளை சிறையாக செயல்பட்டு வந்தது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த மழையில் சிறையின் காம்பவுண்டு சுவர் 25 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது. 

    அங்கிருந்த கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அதன்பிறகு ரூ.18 லட்சத்தில் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு மீண்டும் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி கிளை சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 27 கைதிகள் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று பெய்த மழையில் சங்ககிரி கிளை சிறையில் காம்பவுண்டு சுவர் 18 அடி உயர காம்பவுண்டு சுவர் 60 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன், தாசில்தார் பானுமதி மற்றும் வருவாய்த்துறையினர் கிளை சிறைக்கு வந்து பார்வையிட்டனர். 

    சிறை சூப்பிரண்டு தனலட்சுமியிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் சிறை சுவருக்கு அருகில் கழிவுநீர் தேங்காத வகையில் மண் போடப்பட்டது. இதற்கிடையே சங்ககிரி கிளை சிற¬யில் இருந்து 9 கைதிகள் பாதுகாப்பு கருதி சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
    Next Story
    ×