search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை காலம்
    X
    தடை காலம்

    மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முதல் தொடங்குகிறது

    ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
    ராமேசுவரம்

    தமிழக கடலோரப் பகுதியில் மீன்பிடி இனப்பெருக்கத்திற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய அரசு அறிவிப்பின்படி தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மீன் பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடைக்காலம் விதிக்கப்படும். அதன் பேரில் சில ஆண்டுகளாக மீனவர் கள் தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம்  நாளை (14ந்தேதி) நள்ளிரவு முதல் ஜூன் 14 நள்ளிரவு வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த மீன்பிடி தடை காலத்தை பின்பற்றி வருகின்றனர். 

    ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு 12மணி முதல் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பார்கள். அதன்பின்னர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி பணியில் ஈடுபடுவார்கள்.

    தமிழக அரசு அறிவிக்கும் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதியில் இருந்து ஏறத்தாழ 61 நாட்களில் 27நாட்கள் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள். மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இறால் மீன், கணவாய் மீன், நண்டு மீன் உள்பட பல வகையான மீன்களை ஏற்றுமதி கொள்முதல் தொகை ஏறத்தாழ குறைந்தபட்சம் ரூ. 60 கோடி முதல் 100 கோடி வரை ஆகும். மீன்பிடி தடை காலத்தில் இந்த தொகை வருவாய் இழப்பை ஏற்படுத்தும். 

    ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய கடலோர பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முதல் தொடங்குவதால் இந்த 61 நாட்களில் ஏறத்தாழ 27 நாட்கள் மட்டும் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள். இவர்கள் பிடித்து வரும் மீன்களை கரையோரங்களில் உலர வைப்பது மற்றும் கொள்முதல் செய்வது,  சேதமடைந்த மீன்பிடி சாதனங்களை பழுதுநீக்குவது மற்றும் விசைப்படகுகள் சேதம் அடைந்தால் அது பழுது நீக்குவது என இந்த தொழிலை நம்பி ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த 61 நாட்களில் நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவர் சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் வேலைவாய்ப்பை இழப்பு நேரிடும்.

    61நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த காலத்தில்  மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு ஒவ்வொரு மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் தடைக்கால நிவாரண வழங்கி வருகிறது.  

    இந்த தொகையை இந்த மீன்பிடி தடைகாலத்தில் உடனடியாக வழங்கும் வழங்கும் பட்சத்தில் மீனவர்கள் இதை இந்த 61நாட்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பயன்படுத் துவதற்கு உதவியாக இருக்கும். ஆதலால் தமிழக அரசு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×