என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தீவிரம்
சில அரசுப்பள்ளிகளில் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய கிராமப்புற மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குகின்றனர்.
உடுமலை:
தமிழகத்தில் அடுத்த மாதம், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் போதிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கு உண்டான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காக சில தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் போட்டித்தேர்வு புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு உதவுகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சில அரசுப்பள்ளிகளில் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய கிராமப்புற மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குகின்றனர். அவ்வகையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் கண்டறியப்படுகின்றனர்.
அவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாளையங்கோட்டையில் இருந்து வினாத்தாள் மற்றும் போட்டித்தேர்வு புத்தகம் வரவழைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் சிலர், இதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவ்வப்போது கவனமாக ‘நீட்’ தேர்வுக்கு தயாராக வேண்டும். போட்டித்தேர்வு வினாத்தாளை கவனித்து ‘நீட்’ தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்களை அறிவுறுத்தியும் வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story