என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  நகைக்கடன் தள்ளுபடி தகுதியானோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி தகுதியானோர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
  சேலம்:

  சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

  சேலம் மாவட்டத்தில் பொதுநகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021-ன் கீழ் தகுதி வாய்ந்த 1,45,364 பயனாளிகளின் பட்டியல் சேலம் மாவட்ட இணையதளத்திலும் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த கூட்டுறவு சங்கங்களிலும் தகுதியானோர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  மேற்கண்ட பட்டியலில் இடம்பெறாதோர் தகுதியிருப்பின் சம்பந்தப்பட்ட சேலம், ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் 30நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். 30 நாட்களுக்குப் பிறகுவரப்பெறும் மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இதுவரை 7232 மேல்முறையீட்டு மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இம்மனுக்கள் மீதுதகுதியின் அடிப்படையில் தீர்வு செய்யப்படும்.

  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

  Next Story
  ×