என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  பள்ளிப்பட்டு அருகே 3 டன் ரே‌ஷன் அரிசியுடன் லாரியை நிறுத்திவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரேசன் அரிசி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட் 3 டன் ரே‌ஷன் அரிசி திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது.

  அவரது உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் தமிழக ஆந்திரா எல்லை ஓரம் பள்ளிப்பட்டு, ஆர்கேபேட்டை, பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  ஆர்.கே.பேட்டை அருகே சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு மர்ம கும்பல் தப்பி சென்று விட்டனர். போலீசார் லாரியை சோதனை செய்தபோது 3 டன் ரே‌ஷன் அரிசி கடத்தி வந்திருப்பது இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட் 3 டன் ரே‌ஷன் அரிசி திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ரேசன் அரிசி கடத்தல்குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆந்திர எல்லையோரம் தொடர்ச்சியாக கடத்தல் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×