என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீஸ் நிலையத்தில் மாநகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஜெய்சங்கர் குத்துவிளக்கு ஏற்றியபோது எடுத்தபடம்.
  X
  போலீஸ் நிலையத்தில் மாநகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஜெய்சங்கர் குத்துவிளக்கு ஏற்றியபோது எடுத்தபடம்.

  நெல்லையில் 2 புதிய போலீஸ் நிலையங்கள் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிதாக கட்டப்பட்டு உள்ள நெல்லை ஐகிரவுண்டு போலீஸ் நிலையம் மற்றும் வி.கே.புரம் போலீஸ் நிலையம் ஆகியவற்றை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
  நெல்லை:

  நெல்லை அரசு மருத்துவக்-கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

  பின்னர் போதிய வசதி இன்மையால் வேறு வாடகை கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. இதற்கு புதிய போலீஸ் நிலையம் கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

  இதற்காக ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாளை மகாராஜநகர் ரவுண்டானா அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் முடிந்த நிலையில் இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

  புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்-நிலையத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  

  காவல் நிலையம் திறக்கப்பட்டதும் மாநகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, ராமேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

  இதனைத்தொடர்ந்து மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் புதிய காவல் நிலையத்தை பார்வையிட்டார். அங்குள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் அறை மற்றும் கைதிகளின் அறைகளை ஆய்வு செய்தார்.

  பின்னர் அதனை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார். இதேபோல் அம்பையை அடுத்த வி.கே.புரம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று காணொலி மூலமாக திறக்கப்பட்டது.
  Next Story
  ×