search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தி-யாளர்கள் கலந்து கொண்-டனர்.

    முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  கொக்கிர-குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்ட-னர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். அருணாசலம் முன்னிலை வகித்தார். ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு பால் உற்பத்தி-யாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது அலி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கறவை மாடுகளுக்கு வழங்கும் தவிடு, புண்ணாக்கு போன்ற தீவனங்கள் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பு பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு ரூ.4, எருமை பாலுக்கு ரூ.6-ம் உயர்த்தப்பட்டது.

    அதன்-பிறகு விலை உயர்த்தப்-படவில்லை. நெல்லை மாவட்டத்தில் 250 பால் கூட்டுறவு சங்கங்-கள் உள்ளன. ஒவ்வொன்-றிலும் 40 முதல் 50 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்-வாதாரத்தை பாதுகாக்க அரசு கொள்முதல் விலையை பசும்பால் லிட்டர் 1-க்கு ரூ.42-ஆகவும், எருமைப்--பால் லிட்டர் 1-க்கு ரூ.51-ஆகவும் உயர்த்தி  வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×