என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  வெல்டிங் பட்டரை உரிமையாளரிடம் வழிப்பறி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெல்டிங் பட்டரை உரிமையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
  திருச்சி :

  திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 42 ).இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். 

  சம்பவத்தன்று இவர் ஸ்டார் நகர் சந்திப்பு வயர்லெஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கத்திமுனையில் இவரை மிரட்டி ஒரு வாலிபர் பணத்தை பறித்து சென்று விட்டார். 

  இதுகுறித்து பாட்ஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் ,ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தருமா என்கிற தர்மசீலன் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

  இதேபோல் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் டி.வி.எஸ் டோல்கேட் முடுக்குபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்ற வாலிபரிடம் செல்போன் திருடியதாக 16 வயது சிறுவனை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×