search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதப்படுத்தப்பட்ட போலீஸ் வாகனம்.
    X
    சேதப்படுத்தப்பட்ட போலீஸ் வாகனம்.

    இரு கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியல்

    ஒரத்தநாடு அருகே போலீசாரை கண்டித்து இரு கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே உள்ள பேய்க்கருப்பகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவருக்கும் அருகே உள்ள கிராமமான புலவன்காட்டை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் கடந்த

     ஆறு நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று திருவிழாவுக்கு வந்திருந்த செந்தில்-குமாரை  வாலிபர்கள் சிலர் தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி

    மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலவன் காட்டை சேர்ந்த விக்ரம், ராஜேஷ், தினேஷ், சரவணன், கண்ணதாசன்,

     மதன் மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் செந்தில்குமார் தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாக

    கூறி பேய்க்க-ருப்பன் கோட்டையை சேர்ந்த கிராம மக்கள் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் புலவன்காடு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு

     விரைந்து வந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் குற்றவாளிகள் மீது உடனடி நடவ-டிக்கை எடுப்பதாக உத்தரவாதம்

    அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க நேற்று இரவு புலவன்காட்டிற்குச் சென்ற

    பாப்பநாடு போலீசார் அங்கு சென்று தலைமறைவாக உள்ள ஒருவரின்  வீட்டின் அருகில் நிறுத்தி இருந்த வேனின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு போலீஸ் வாகனத்தில் கட்டி இழுக்க

     முயன்றபோது பொதுமக்கள் காவல்துறை வாகனத்தையும், போலீ-சாரையும் முற்றுகையிட்டனர். மேலும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்  ஆத்திரம்

     அடைந்த பொதுமக்கள் தஞ்சை &பட்டுக்கோட்டை சாலையில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதட்டம் நிலவி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஒரத்தநாடு, பாப்பாநாடு போலீஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால்  எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை
    .
    பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×