search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் திறன் வளர்ச்சி பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது

    சிறப்பு முகாமானது நாளை 12 ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையில் நடைபெறுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை பிரிவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ச்சி பயிற்சி நாளை 12-ந்தேதி முதல் 29 ந்தேதி வரையில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் தீன்தயாள் உபாத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 10ம் வகுப்புக்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு (ஆண், பெண்) வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

    இதற்கான சிறப்பு முகாமானது  நாளை 12 ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையில் நடைபெறுகிறது.

    இதில் தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை 12 ந்தேதியும், சிவன்மலை வட்டார மேலாண்மை இயக்க அலகில் 13 ந்தேதியும், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 16-ந்தேதியும், வெள்ளக்கோவில் வட்டார வளர்ச்சி அலுவகத்தில் 19 ந்தேதியும், மூலனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20-ந்தேதியும், குன்னத்தூர் என்.ஆர். கே.என். பள்ளியில் 21-ந்தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    அதேபோல அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் 22 ந்தேதியும், பெருமாநல்லூர் வட்டார மேலாண்மை இயக்க அலகில் 23 ந்தேதியும், உடுமலை வட்டார மேலாண்மை இயக்க அலகில் 26-ந்தேதியும், பெதப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 27 ந்தேதியும், அருள்புரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இரு இடங்களில் 28 ந்தேதியும், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 29-ந்தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    இதில் பயிற்சியின்போது மாணவர்களுக்கு தங்கும் இட வசதியுடன் இலவச உணவு, பாடப்புத்தகங்கள், சீருடை, போக்குவரத்து செலவினங்கள், இலவச இணையதள வசதி ஆகியவை வழங்கப்படும். 

    ஆகவே பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பங்கேற்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94440-94396 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×