search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த கோரிக்கை

    நெல்லை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என மாநகராட்சி முதல் கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி முதல் கூட்டத்தில் பல்வேறு கவுன்சிலர்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

     12-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கொடுத்த கோரிக்கை மனுவில் வார்டுக்குட்பட்ட தாமிரபரணி நதியோரம் உள்ள பகுதிகளில் சாக்கடைநீர் ஆற்றுநீருடன் கலக்கிறது. அதனை தடுக்க இருபுறமும் சுவர் அமைத்து தரவேண்டும்.

    செல்விநகரில் செயல்பட்டு வந்த மருந்தகத்தை மீண்டும் இயக்க வேண்டும். உடையார்பட்டி, செல்வபாலாஜி கார்டன் பகுதியில் புதிய நீர்தேக்க மேல்நிலை தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

    32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சவுந்திரபாண்டியன் கொடுத்த மனுவில் குறிஞ்சிநகர், இலந்தகுளம், புதுப்பேட்டை தெரு, நம்பிக்கை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நந்தனார் தெருவில் உள்ள பொதுமக்கள் பாளையங்கால்வாயை தடுக்க குறுகியதாக பாலம் உள்ளது. அதனை புதுப்பித்து அகலமாக கட்டவேண்டும். வார்டுக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் நடைபெறாமல் உள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செயல்படாமல் உள்ள அடிபம்புகளை சீரமைக்க வேண்டும். கடந்த 26 ஆண்டுகளாக மாநகராட்சி எல்லைகள் விரிவுபடுத்தாமல் உள்ளது. அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 1965-ம் ஆண்டு காமராஜரால் பாளை பஸ்நிலையம் தொடங்கி வைக்கப்பட்டு அதற்கான கல்வெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

    தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பஸ்நிலையம் சீரமைக்கப்பட்டு அந்த கல்வெட்டு அமைக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த கல்வெட்டை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுஅளித்திருந்தார்.
    Next Story
    ×