என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
கருமாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் கருமாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் கருமாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்து வருகிறது. இதையொட்டி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
இதில் மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறும், வேண்டுதல்கள் நிறைவேற்ற அக்னி சட்டிகளை கைகளில் ஏந்தியவாறும், அம்மன் வேடமணிந்தவாறும் ஊர்வலமாக வந்தனர்.
மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கருமாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். பொங்கல் வைத்து வழிபடுதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story