search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் விக்கிரமராஜா பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் விக்கிரமராஜா பேசிய காட்சி.

    பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டண உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம்-விக்கிரமராஜா பேச்சு

    கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டண உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என கூட்டத்தில் விக்கிரமராஜா கூறினார்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர்-சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார்.பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

     தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் மே 5-ந் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய தலைவர்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வணிகர்கள் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

     இந்த மாநாடு எங்கள் அமைப்பிற்கு திருப்புமுனை மாநாடாக, வணிகர்களின் கோரிக்கை நிறைவேறும் மாநாடாக இருக்கும். மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு வணிகர்களின் குறைதீர்க்கும் வெற்றி மாநாடாக அமையும். 

    பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டண உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம், விலையேற்றத்திற்கும் வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை.

    பெரிய நிறுவனங்கள், சில்லறை வணிகத்தினை கைப்பற்றும் சூழ்ச்சி நடைபெற்று கொண்டு இருப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கலப்படம் செய்பவர்-களுக்கு நாங்கள் துணை போவது கிடையாது.

     அவ்வாறு செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், எண்ணெய் வித்துகளில் மற்ற எண்ணெய்களுடன் கலப்பு செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். 
    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வடக்கு மாவட்ட தலைவராக அசோகன், செயலாளராக ஜேசுராஜ், பொருளாளராக கண்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளராக கார்த்தீஸ்வரன், ஆலோசகர்களாக பன்னீர்செல்வம், பாஸ்கரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    Next Story
    ×