search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நெல்லை மாநகராட்சி முதல் கூட்டம் நாளை நடக்கிறது

    நெல்லை மாநகராட்சியின் முதல் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த சரவணன் மேயராகவும், கே.ஆர்.ராஜூ துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

    அதே போல் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களுக்கும் மண்டல தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சியின் முதல் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது. 

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது. 6 ஆண்டுகள் கழித்து தற்போது மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நாளைய கூட்டத்தில் மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு திட்டங்-களுக்கு ஒப்புதல் பெற தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 

    நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை ஐகிரவுண்டு சாலையில் அறிவுசார் மையம் ரூ.1.79 கோடியில் அமைக்கப்படு-கிறது.

    இதற்காக ஒப்புதல் கோரி மாநகராட்சி முதல் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. மேலும் மாநகராட்சி 4 மண்டலங்கள், சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் 40 சுய உதவிக்குழுக்கள் மூலம் பணியாற்றி வரும் 645 ஊழியர்களை மேலும் 88 நாட்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணிபுரிய அனுமதி கோரப்படுகிறது.

    மேயர் அன்றாட அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாநகராட்சி பொது நிதியின் கீழ் புதிய வாகனம் கொள்முதல் செய்வதற்கு அனுமதி கோரப்படுகிறது. டவுன் மீன் சந்தை முன்பு கட்டணம் வசூல்,

     நெல்லை மாநகராட்சியில் 21 பாதுகாவலர்களை ஒரு-வருடம் பணியமர்த்தி கொள்ள ஒப்புதல் கோருதல் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெற நாளை நடைபெறும் முதல் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
    Next Story
    ×