search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓமலூர் அருகே துணிகர திருட்டு கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை வேட்டை

    ஓமலூர் அருகே கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
    சேலம்:

    ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ஊராட்சி மரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 68). இவர் சிந்தடிக் கல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா. இவர் களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தொழில் ரீதியாக பெங்களூரு சென்ற மனோகரன், அங் குள்ள தனது மூத்த மகன் மோகன் குமார் வீட்டில் தங்கி உள்ளார்.

    இந்தநிலையில் அவர் களது இளைய மகன் வெங்கடேசிற்கு குழந்தை பிறந்ததால், சேலத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு விஜயா, தங்களது வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். அதே பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (43). இவர் வெள்ளி கொலுசு வியாபாரம் செய்து வரு கிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மங்களூரு சென்று இருந்தார்.

    இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து மனோகரன், மஞ்சுநாதன் ஆகியோர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், 2 பேரின் வீடுகளிலும் 20 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மரக்கோட்டை பகுதியை சேர்ந்த குணசேகரன், ராதா கிருஷ்ணன். மணிவண்ணன், விஜயலிங்கம், சுப்பிர மணியம், ஜெயமணி ஆகிய 6 வீடுகளிலும் திருட முயற்சி நடந்துள்ளது. இவர்களது வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால், ஏமாற்றத்தில் துணி மணிகளை களைத்து போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது. 

    இந்த சம்பவம் நடந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் அடிக்கடி வீட்டை பூட்டிவிட்டு தொழில் சம்பந்தமாக வெளி யூர்களுக்கு சென்று விடுவது வழக்கம். இதை கண் காணித்து தான் மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை மடக்கி பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமி ராக்களில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? வேறு ஏதும் தடயங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.
    Next Story
    ×