search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கு சிறப்பு பூஜை.
    X
    வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கு சிறப்பு பூஜை.

    மன்னார்குடி ஒன்றியத்தில் 150 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மன்னார்குடி ஒன்றியத்தில் 150 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
    மன்னார்குடி:

    மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர்  குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து மன்னார்குடி ஒன்றியம் முணாம்சேத்தி ஊராட்சி காசாங்குளம் கிராமத்தில் விளக்க கூட்டம் நடைபெற்றது.
     
    இதற்கு முணாம்சேத்தி பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. திருவாரூர் மாவட்ட அரசு தொடர்பு  பிரிவு தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் எம்.ராகவன் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தினை தொடங்கி வைத்து விளக்க உரையாற்றினார்.

    அப்போது கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும், குடிநீருக்காக யாரும் அலையக்கூடாது என்பதற்காகவும் ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் திட்டங்களில் ஜல் ஜீவன் திட்டம் முக்கியமானது. இதன் மூலம் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது என்றும், மத்திய அரசின்  பல்வேறு நல்ல திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

    இதில் காசாங்குளம், கருவாக்குளம், முதல்சேத்தி ஆகிய கிராமங்களில் 150 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது, அப்போது குடிநீர் குழாயுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 29.6 லட்சம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலபாஸ்கர், ஊராட்சி செயலாளர் கே.கலியபெருமாள்,வார்டு உறுப்பினர் எஸ்.செந்தில் குமார், ஓ.பி.சி.யின் தலைவர் திலீபன், தூய்மை பணியாளர்கள், சரோஜா, செல்வி, மீனா, குமார், கணபதி, ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×