என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  துரியோதனன் படுகளம் நடந்த காட்சி.
  X
  துரியோதனன் படுகளம் நடந்த காட்சி.

  துரியோதனன் படுகளம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் மாடப்பள்ளி கிராமத்தில் துரியோதனன் படுகளம் நடந்தது.
  திருப்பத்தூர்:

  மகாபாரத சொற்பொழிவு நடத்தினால் வெயில் குறைந்து மழை பெய்யும் என்பது கிராம மக்களின் ஐதீகம். திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ தர்மராஜா திரவுபதி அம்மன் திருக்கோயில் மகாபாரத சொற்பொழிவு வசந்த உற்சவம் மற்றும் தீமிதி விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

  தொடர்ந்து காலை மாலை இருவேளையும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

  அதனை தொடர்ந்து தினமும் தொடர்ந்து திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், பாஞ்சாலி துயில், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணன்தூது, கிருஷ்ணன் பிறப்பு கர்ணன் மோட்சம் தெருவீதி நாடகம் தூது, முக்கிய நிகழ்வாக துரியோதனன் 30 அடி உயர சிலை செய்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

  நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் விஜியாஅருணாசலம், துணைத் தலைவர் டி ஆர்.ஞானசேகரன், ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாடப்பள்ளி, மடவாளம், செவந்தம்பள்ளி, அகரம், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×