search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் அமைக்கப்பட்ட வாரச்சந்தை.
    X
    சாலையோரம் அமைக்கப்பட்ட வாரச்சந்தை.

    ஜோலார்பேட்டை பகுதியில் தடையை மீறி நடந்த வாரச்சந்தை

    ஜோலார்பேட்டை பகுதியில் தடையை மீறி வாரச்சந்தை நடைபெற்றது.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சந்தை கோடியூரில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று வார சந்தை கூடுகிறது. இதில் ஆடு, கோழி போன்றவை வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். 

    இதனையடுத்து காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடை வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாரச் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    மேலும் வார சந்தையானது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து மூலம் பொதுமக்களுக்கு வாகன ஓட்டிகளால் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என எண்ணி ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி என்பவர் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், 

    சாலையோரத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பொது மக்களுக்கு இடையூறு மற்றும் பாதிப்பு ஏற்படுவதால் இந்த வாரம் புதன் கிழமை (நேற்று) சந்தை நடைபெறாது என உத்தரவிட்டு சந்தை அமைக்கும் பகுதியில் போர்டு வைக்கப்பட்டது. 

    ஆனால் ஆணையரின் உத்தரவை மீறி நேற்று சந்தை நடத்தும் வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். இதனால் பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மூலம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி ஆணையர் நேற்று வார சந்தை அமைக்க கூடாது என உத்தரவிட்டும் சந்தை வியாபாரிகள் கடை அமைத்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது.
    Next Story
    ×