என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜோலார்பேட்டை பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்7 April 2022 11:14 AM GMT
ஜோலார்பேட்டை பகுதிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.08 லட்சம் மதிப்பீட்டில் 1.05 கிலோ மீட்டர் நீளமுள்ள எபினேசர் பள்ளி பின்புறத்திலிருந்து கோட்டூர் செல்லும் சாலையில் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஜோலார் பேட்டை அடுத்த சின்ன கம்மியம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் சின்னகம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து ஏலகிரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் வரப்பு கட்டுதல் மற்றும் செடிகள் பராமரிப்பு பணியினையும், அதன் பிறகு ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 8.30 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி கசிவு நீர் குட்டை அமைக்கும் பணியையும் அதன் பிறகு புள்ளானேரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தும்பன் ஏரி முதல் ஒட்டப்பட்டி ஏரி வரை உள்ள வரத்து கால்வாய் பராமரிப்பு மற்றும் தூர்வாருதல் பணியினை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பணிகளை விரைவாகவும் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விநாயகம், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா இளவரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X