என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
Byமாலை மலர்7 April 2022 11:04 AM GMT (Updated: 7 April 2022 11:04 AM GMT)
வீட்டிக்கு தாமதமாக வந்ததை தாய் தட்டி கேட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் நாகேஸ்வரி (வயது 17).
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்&2 படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் பள்ளி முடிந்து நீண்ட நேரத்துக்கு பின்னர் காலதாமதமாக வீட்டிற்கு வந்தார்.
இதனையடுத்து நாகேஸ்வரியிடம் அவரது தாய் ஏன் இவ்வளவு காலதாமதம் என கேட்டார். அதற்கு பதில் ஏதும் அளிக்காமல் வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
அங்கு வைத்து நாகேஸ்வரி சாணிப்பவுடரை கரைத்த குடித்தார். பின்னர் தனது சகோதரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் சாணிப்பவுடர் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து சென்று தனது சகோதரியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நாகேஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×