search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருக்குறுங்குடியில் தொழிலாளிக்கு கத்திக்குத்து

    திருக்குறுங்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    திருக்குறுங்குடி மகிழடி கீழூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (38). கூலி தொழிலாளி. 

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்வகுமாரின் மகன் ரூபன் அங்குள்ள இளைஞர்களுடன் கபடி விளையாடினார். அப்போது ஒழுங்காக விளையாட வில்லை என்று கூறி சிலரை சத்தம் போட்டுள்ளார். 

    இதுதொடர்பாக மகிழடி கீழூர் வடக்குத் தெருவை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் ரூபனை கண்டித்துள்ளார். இதுபற்றி ரூபன் தனது தந்தை செல்வகுமாரிடம் கூறினார். இதையடுத்து செல்வகுமார் அருள்ராஜிடம் சென்று தட்டிக் கேட்டார். 

    இதனைதொடர்ந்து இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று செல்வகுமார் அங்குள்ள சண்முகம் என்பவரது வீட்டு முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த அருள்ராஜ், அவரது மகன் கதிர் என்ற கதிரேசன் ஆகியோர் செல்வ-குமாரை அவதூறாக பேசி கத்தியால் குத்தினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். 

    இதனால் படுகாயம் அடைந்த செல்வகுமாரை உறவினர்கள் மீட்டு திருக்-குறுங்குடி அரசு மருத்துவ-மனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். 

    இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்-பட்டது. ஏர்வாடி இன்ஸ்-பெக்டர் ஆதம் அலி, சப்--இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்-பதிவு செய்து, விசாரணை நடத்தி இதுதொடர்பாக அருள்ராஜ் மற்றும் அவரது மகன் கதிர் என்ற கதிரேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×