என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாத்தான்குளம், எட்டயபுரத்தில் பரவலாக மழை
Byமாலை மலர்7 April 2022 9:53 AM GMT (Updated: 7 April 2022 9:53 AM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்தது. நேற்று மழை குறைந்த போதிலும் நெல்லை மாவட்டத்தில் நம்பியாறு அணை பகுதியில் மட்டும் கனமழை பெய்தது.
மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதிகபட்சமாக நம்பியாறு அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நேற்று மழை இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை எட்டயபுரம், சாத்தான்குளம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளத்தில் பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
மாநகர பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான காற்று வீசியதால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

Next Story
×