search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிடப்பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகம்.
    X
    கட்டிடப்பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகம்.

    கட்டிமுடித்து ஒரு வருடம் ஆகியும் திறக்கப்படாத டி.எஸ்.பி. அலுவலகம்

    சாத்தான்குளத்தில் கட்டிடப்பணிகள் முடிந்து ஒரு வருடம் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள புதிய அலுவலகத்தை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகம் முஸ்லீம் தெருவில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

    சாத்தான்குளம் காவல் நிலையத்தை கண் காணிக் கும் வகையில் டி.எஸ்.பி. அலுவலகம் அமைக்க வேண்டும் என  வியாபாரிகள்  வலியுறுத் தினர்.

    அதன்படி காவலர் குடியிருப்பு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் அவரது குடியிருப்பு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    கட்டி  முடிக்கப்பட்டதும் கடந்த  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதனை பார்வையிட்டு விரைவில் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டாலும் இன்னும் டி.எஸ்.பி. அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது.

    ஆதலால் மாவட்ட எஸ்.பி. இதனை கவனித்து டி.எஸ்.பி. அலுவலகத்தை உடனடியாக திறந்து  புதியகட்டிடத்தில்  செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்,  வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×