search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான வெள்ளையம்மாள்
    X
    கைதான வெள்ளையம்மாள்

    பள்ளி மாணவன் கொலை வழக்கில் பெண் கைது

    பள்ளி மாணவன் கொலை வழக்கில் போலீசார் ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர்.

    திருச்சி:


    திருச்சி மாவட்டம், மணப்-பாறையை அடுத்த கஞ்ச நாயக்-கன்பட்டியைச் சேர்ந் தவர் ராமலிங்கம். இவரது 15 வயது மகன் கிருஷ்ணன். அந்த----பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10&ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள செட்டியபட்டி கிரா-மத்தைச் சேர்ந்த வெள்ளை-யம்மாள் என்பவரிடம் ராம-லிங்கம் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.

    இது-தொடர்பாக இருவ-ருக்-கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ராமலிங்கத்-தின் இருசக்கர வாகனத்தை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 21&ந்தேதி இரு-சக்கர வாகனத்தை கேட்கச் சென்ற ராமலிங்-கத்தின் மகனை வெள்ளை-யம்மா ளுடன் இருந்த அவரது ஆண் நண்பர் பச்ச-முத்து என்பவர் அரிவாளால் வெட்டினார்.

    இதில் படுகாய-மடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் கிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே பச்சமுத்-துவை கைது செய்தனர்.

    ஆனால் வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மாணவன் படிக்கும் பள்ளி-யைச் சேர்ந்த மாண-வர்கள் சம்மந்தப்பட்ட பெண் குற்ற-வாளியை கைது செய்து கடு-மையான நடவ-டிக்கை எடுத்-திட வலியுறுத்தி கஞ்சநாயக்-கன்-பட்டியில் துவரங்-குறிச்சி &செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்-டனர்.

    அப்போது குற்றவாளியை கைது செய்யக்கோரியும் முறையான நடவடிக்கை எடுக்காத காவல்துறையின- ரைக்கண்டித்தும் முழக்-கங்கள் எழுப்பினர். தகவல-றிந்த மருங்காபுரி வரு-வாய்த்-துறையினர் மற்றும் துவரங்-குறிச்சி போலீசார் சம்பவ இடத்-திற்குச் சென்று பேச்சு-வார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் பெண் குற்றவாளியை கைது செய்-யாதவரை நாங்கள் மறியல் போராட்டத்தை கைவிடப்-போவதில்லை என்று கூறி போராட்டத்தை தொடர்ந்-தனர்.

    இதற்கிடையே துவரங்-குறிச்சி போலீசார் வெள்ளை-யம்மாளை தேடிச்சென்-றிருந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரில் தலைமறைவாக இருந்த-போது கைது செய்தனர். பின்னர் வெள்ளையம்மாள் கைது செய்யப்பட்ட தகவல் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு தெரிவிக்-கப்பட்டது.

    மேலும் கைது செய்யப்பட்ட வெள்ளை-யம்மாளை வீடியோ காலில் போலீசார் காட்டியதால் சமாதானமடைந்த மாணவர்-கள் போராட்டத்தை கை-விட்டு கலைந்து சென்-றனர். சக மாணவனை கொலை செய்த குற்றவா-ளியை கைது செய்யக்கோரி பள்ளி மாண-வர்கள் தொடர்ந்து 4 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×