search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்
    X
    கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்

    செங்கோட்டையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    செங்கோட்டையில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் புளியங்குடி அ.ம.மு.க. நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். முன்னாள் தொகுதி செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் முன்னிலை வகித்தார்.

    புளியங்குடி அ.ம.மு.க .நகர செயலாளர் சுகிர்தராஜன், 2-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷெலின்சுகிர்தராஜன், நகர இணை செயலாளர் விஜயலெட்சுமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் மைதீன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகன், இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், மீனவரணி செயலாளர் மாரியப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிச்சாமி, வார்டு செயலாளர்கள் பலர் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

    புதியதாக அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
    Next Story
    ×