என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகம் முழுவதும் 11-ந் தேதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம்
Byமாலை மலர்7 April 2022 9:31 AM GMT (Updated: 7 April 2022 9:31 AM GMT)
தமிழகம் முழுவதும் 11-ந் தேதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் என ஆசிரியர், அலுவலர் கட்டமைப்பு அறிவிப்பு
நாகர்கோவில்:
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பொதுச்-செயலாளர் கனகராஜ், துணை பொது செயலாளர் ஸ்ரீ ரமேஷ், செய்தி தொடர்பாளர் டோமினிக் ராஜ் ஆகியோர் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது கூறியதாவது:
தமிழகத்தில் 35 சதவீத மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். அரசு பள்ளிகளுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு வரை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கபட்டது.
அதன் பிறகுதான் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மறுக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் உயர்கல்விக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே அரசு பள்ளி மாணவர்களை போன்று அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும்.
அரசு உதவிபெறும் பள்ளி-களில் அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் ஊதியம் இல்லாமல் பணி செய்யும் 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 31-3-2021 அன்று வழங்கப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை ஆணையாளருக்கு அளித்துள்ளோம். மேலும் சென்னையில் உள்ள டி.பி.ஐ. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினோம். ஆனாலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாத நிலை தொடர்கிறது.
அரசு பள்ளிகள் செல்லாத காலந்தொட்டே ஏழை, எளிய, கிராமப்புற, அடித்தட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வியளித்து வரும் பழம் பெருமை மிக்க அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசு ஓர வஞ்சனையுடன் நடத்துகிறது.
எனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 11-ந் தேதி அன்று தமிழகச் சட்டப் பேரவையில் கல்வி மானியக் கோரிக்கை விவாதிக்கப்படும் போது 3 அம்ச கோரிக்கை அடங்கிய அட்டையை அணிந்து பள்ளிக்கு செல்லும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த போராட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X