என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் குறித்து விழிப்புணர்வு
Byமாலை மலர்7 April 2022 9:23 AM GMT (Updated: 7 April 2022 9:23 AM GMT)
தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை வட்டாரத்தில் இரண்டாயிரத்து 454 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்-பட்டுள்ளது. கடந்த 2018 கஜா புயலால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
பல தோப்புகள் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் மீண்டும் அரசு வேளாண்-மைத்துறை திட்டங்களால் தென்னை சாகுபடி செய்ய பட்டு வளர்ந்து வரும் நிலையில் சமீபகாலமாக பாதிப்பினை ஏற்படுத்தும் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் மிகப்பெரிய அளவில் அனைத்து தென்னை மரங்--களையும் பாதித்துள்ளது.
இந்த பூச்சியின் தாக்குதல் தென்னை இலைகளில் பச்சையம் மறைந்து கருமை நிறமாக மாறிவிடுகிறது. சில நாட்களிலேயே மட்டைகள் அனைத்தும் காய்ந்து போய் விடுவதால் மரமே பட்டுப் போகும் ஆபத்து உள்ளது இதனை தடுப்பதற்கு வேளா-ண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்-கப்-பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்னை சாகுபடி செய்-யப்பட்டிருக்கும் கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. இம் முகாம்களில் விவசாயிகளுக்கு பூச்சியை அழிக்கும் கிரைசோபிர்லா எனும் இரை விழுங்கி பூச்சியின் முட்டைகள் உள்ள அட்டை மற்றும் மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி அதற்குரிய ஒட்டு திரவம் முதலியன 90 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இன்று தில்லைவிளாகம் கிராமத்தில் நடந்த முனைப்பு இயக்கத்தினை ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் இப் பூச்சியானது வெளி-நாட்டிலிருந்து வந்துள்ள புதிய வகை பூச்சியாகும். இது தென்னை மட்டுமல்லாது அனைத்து தோட்டக்கலை பயிர்களையும் தாக்கக்-கூடியது எனவே அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம் என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது
கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை பயன்படுத்தக்-கூடாது. வேம்பு மருந்து மற்றும் மைதா பசை கலந்த திரவதினை இலையின் அடிப்பகுதியில் படும்படி தெளித்தாள் எளிதில் பூச்சி கட்டுப்படும் என்று தெரிவித்தார். ஒரு மாத இடைவெளியில் மீண்டும் இதே தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த முனைப்பு இயக்கத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது பூச்சியினை கட்டுப்படுத்த அரசின் நேரடி உதவி அவசியம் தேவைப்படுகிறது ஏனெனில் தென்னை மரங்கள் சுமார் 40 அடி உயரத்தில் உள்ளது இம் மரங்களில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பதற்கு டிராக்டரில் பொருத்தப்பட்ட அதிசக்தி உள்ள விசைத் தெளிப்பான் பயன்படுத்தவேண்டும் சிறு மற்றும் குறு விவசாயிகளோ தனிப்பட்ட பெரிய விவசாயிகளோ இந்த முயற்சிகளை எளிதில் செய்ய இயலாது.
எனவே அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் சில வருடங்களுக்கு முன் நெய்வேலி காட்டாமணக்கு அழிப்பதற்கு எடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை போல் அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் டிராக்டரில் பொருத்தப்பட்ட அதிசக்தி உள்ள விசைத் தெளிப்பான் வழங்கி வேளாண்மைத் துறையின் மூலம் இத்-திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னோடி தென்னை விவசாயி ரங்கசாமி பேசும்போது கஜா புயல் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் காய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. மேலும் இப்பூச்சியின் தாக்குதல் காய்ப்பு அறவே இல்லாமல் போய்விடும் எனும் அச்சம் ஏற்பட்டுள்ளது மேலும் பூச்சியினால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களில் புதிய பாலைகள் வராமல் உள்ளது. எனவே தென்னை நுண்ணூட்டத்தினை 50 சதவீத மானியத்தில் தேவைப்படும். அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டுமெனவும் ஒரு கிராமத்துக்கு குறைந்தது 15 எண்கள் பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான் மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
நிறைவாக வேளாண் துணை அலுவலர் காத்தையன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் ஜெயசேரன் மற்றும் கதிர் ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X