என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்
Byமாலை மலர்7 April 2022 8:23 AM GMT (Updated: 7 April 2022 8:23 AM GMT)
சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் - நாளை காலை நடைபெறுகிறது
கன்னியாகுமரி:
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப் பதியின் வடக்கு வாசலில் ஆறு வருடங்கள் பக்தர்களுக்காக தவமிருந்தார். இந்த தவம் நிறைவு பெற்ற பிறகு அந்த தவத்தின் பலனை பற்றி அறிவதற்காக முட்டப்பதி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவரை அனுப்பி சாமிதோப்பில் இருந்து அய்யா வைகுண்ட சுவாமியை முட்டப்பதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
முட்டப்பதியிலிருந்து சாமிதோப்பு வந்த கலைமுனி, ஞானமுனி ஆகிய இரு-வருடனும் மற்றும் தனது பக்தர்களுடன் அய்யா வைகுண்டசுவாமி பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்-கிழமை அன்று ஊர்வலமாக முட்டப்பதி நோக்கி சென்றார்.
அங்கு பக்தர்கள் கடற்-கரையில் காத்திருக்க வைகுண்டசாமி திருப்பாற் கடலுக்குள் சென்று திருமா லுடன் ஆலோசனை பெற்று பின்னர் அன்று மாலையே சாமி தோப்புக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் முத்து குடை ஊர்வலம் நாளை 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமி-தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு தலைமைப் பதியில் முன்பிருந்து முத்து குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்படுகிறது.
இந்த ஊர்வலத்தை பால. ஜனாதிபதி துவக்கி வைக்கிறார். டாக்டர் வைகுந்த் ஊர்வலத்திற்கு தலைமை வகிக்கிறார். பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், பையன் நேம் ரிஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டபதி சென்றடைகிறது. ஊர்வலம் போகும் பகுதிகளிலுள்ள நிழல் தாங்கல்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைகிறது. அங்கு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யா வழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
ஊர்வலம் மீண்டும் 4 மணிக்கு முட்டப்பதிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொத்தையடி, அரசம்பதி வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைகிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X