என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயம்
Byமாலை மலர்7 April 2022 8:14 AM GMT (Updated: 7 April 2022 8:14 AM GMT)
மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் செல்வகுமார் (வயது31).இவர் மணிமுத்தாறு போலீஸ் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். தற்போது இவர் குளச்சல் துறைமுக சோதனைச் சாவடியில் பணி புரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் அண்ணாசிலை சந்திப்பிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குளச்சல் கிராம நிர்வாக அலுவலகம் திருப்பில் செல்லும்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயமடைந்த செல்வகுமாரை அப்பகுதியினர் மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பைக் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.
Next Story
×