search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அரவிந்த் ஆய்வு
    X
    கலெக்டர் அரவிந்த் ஆய்வு

    வேளாண்மை திட்டப்பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு

    தோவாளை வட்டாரத்தில் வேளாண்மை திட்டப்பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் சகோதரத்துறைகளில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    தோவாளை வட்டாரம் தெற்கு மலை  கிழக்கு நிலத்தடி நீரினைப் பயன்படுத்துவோர் சங்க தொகுப்பிற்கு பிரதம மந்திரி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், 2020-21-ம் நிதியாண்டில் ரூ.5.34 லட்சம் தொகையில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 4.840 ஹெக்டேர் நிலத்தினை மேம்படுத்தி, ஆழ் குழாய் கிணறு அமைத்து 5 குதிரைத்-திறன் கொண்ட சூரியசக்தி பம்ப்அமைத்து, நீர்ப்பாசனத்திற்கான பைப்புகள் அமைத்து கொடுத்த திட்டம் ஆய்வு செய்து திட்டத்தின் பயன்களைப்பற்றி குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார். 

    மேலும் அங்கு ரோஜா, துளசி போன்ற தோட்டக் கலைப் பயிர்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட நுண்ணீர் பாசனத் திட்ட திடலையும் கலெக்டர் பார்வையிட்டார். 

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் கூட்டுப் பண்ணைய திட்டத்தில் மாதவலாயம் உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டதோடு, இத்திட்டத்தின் மூலம் குழுவுக்கு வழங்கப்பட்ட டிராக்டர் மற்றும் இக்குழு செயல்பாட்டில் டிராக்டர் வாடகை மூலம் பெறப்பட்ட தொகையில் வாங்கப்பட்டதொழி அடிக்கும் கூண்டு சக்கரம், கொழு கலப்பை ஆகியவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    ஈசாந்திமங்கலம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுடன் அவர்கள் சாகுபடி செய்வதில் ஏற்படும் இன்னல்களை பற்றியும், மழையினால் சேதமடைந்த நீர்நிலைகள் சரி செய்வது, நுண்ணீர் பாசனம் அமைப்பது, பயிர்காப்பீடு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாடு போன்றவற்றை பற்றியும் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, தோட்டக் கலை துணை இயக்குநர் ஷீலாஜாண், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஜென்கின் பிரபாகர், தோட்டக்கலை அலுவலர் சந்திரலேகா மற்றும் களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×