என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருவள்ளூரில் லாரி மோதி மூதாட்டி பலி
Byமாலை மலர்7 April 2022 7:20 AM GMT (Updated: 7 April 2022 7:20 AM GMT)
திருவள்ளூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புதுமவிலங்கை கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவரது மனைவி காளிகாதேவி (வயது58). இருவரும் திருவள்ளூர், கண்ணதாசன் நகரில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் புதுமா விலங்கை கிராமத்திற்கு பஸ்சில் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து காளிகாதேவி பஸ்நிலையம் செல்வதற்காக உறவினரான கணேசன் என்பவரது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரது கணவர் திருஞானசம்பந்தம் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்.
உழவர் சந்தை அருகில் உள்ள சிக்னல் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத் தில் சிக்கிய காளிகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற கணேசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனை கண்டு பின்னால் நடந்து வந்த திருஞானசம்பந்தம் அலறி துடித்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் விரைந்து வந்து காளிகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×