search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ரூ.1ரு கோடிக்கு பருத்தி ஏலம்

    நாமக்கல்லில் 3,450 மூட்டை பருத்தி ரூ.1ரு கோடிக்கு ஏலம் போனது.
    நாமக்கல்,

    நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 3 ஆயிரத்து 450 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.


    ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 499 முதல் ரூ.12 ஆயிரத்து 725 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 499 முதல் ரூ.13 ஆயிரத்து 309 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 109 முதல் ரூ.9 ஆயிரத்து 500 வரையிலும் ஏலம் போனது.

    இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
    Next Story
    ×