search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    மோகனூரில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    நாமக்கல்

    மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுடரொளி தலைமை தாங்கினார். மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

    மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ஓவியா ஆகியோர் பேசினர். அப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் தற்போது போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது. போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்றனர். 

    மேலும் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், பின்விளைவுகள் குறித்து கூறினர். தொடர்ந்து மாணவிகளிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

    பின்னர் பள்ளி மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மோகனூர் காவல்துறை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×