என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  பொதுமக்கள் தொடர்பு கொள்ள 200 கவுன்சிலர்களுக்கும் புதிய செல்போன் எண்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக இந்த எண்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. 94454 67001 எண்ணில் தொடங்கி 94454 67200 வரை கவுன்சிலர்களுக்கு வரிசையாக ஒரே மாதிரியான எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
  சென்னை:

  சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர்களையும் பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொள்ள வசதியாக செல்போன் எண்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் மேயர்களாக இருந்தபோது வழங்கப்பட்டன.

  அந்தந்த வார்டுகளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் செல்போன் எண்கள் வழங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது.

  அதேபோல தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மேயர், துணை மேயர் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் புதிய செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டன.

  பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக இந்த எண்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன. 94454 67001 எண்ணில் தொடங்கி 94454 67200 வரை கவுன்சிலர்களுக்கு வரிசையாக ஒரே மாதிரியான எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

  முதல் 7 எண்கள் ஒரே மாதிரியாக இருக்கும். கடைசி 3 எண்கள் மட்டும் அந்தந்த வார்டுகளை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

  மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்களை கவுன்சிலர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அந்த எண்களில்தான் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சொல்ல முன் வருவார்கள் என்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள எண்களை கவுன்சிலர்கள் தங்கள் சொந்த செல்போனில் போட்டு பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

  Next Story
  ×