என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பயங்கர ஆயுதங்களுடன் பள்ளி மாணவர்கள் மோதல்- கத்தி, சைக்கிள் செயின், கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்7 April 2022 5:19 AM GMT (Updated: 7 April 2022 5:19 AM GMT)
திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அறிவுரையும் வழங்கினர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி கே.வி.ஆர்.நகரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கபடிபோட்டி நடந்தது. இதில் 8, 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தினமும் வகுப்பு இடைவேளையின்போது ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர்.
இதற்கிடையே ஒரு குழுவை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு குழுவை சேர்ந்த மாணவர்களை தாக்க கத்தி, சைக்கிள் செயின் ஆகியவற்றை கழிப்பறையில் பதுக்கி வைத்திருந்தனர். அதேப்போல் மற்றொரு குழுவை சேர்ந்த மாணவர்களும் எதிர்தரப்பு மாணவர்களை தாக்க ஆயுதங்களை பள்ளிக்கு கொண்டு வந்து மறைத்து வைத்திருந்தனர்.
இந்த விவரம் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவரவே அவர்கள் கழிப்பறையில் சோதனை நடத்தினர். அங்கு கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவற்றை பறிமுதல் செய்து மாணவர்களை எச்சரித்தனர்.
இதுகுறித்து வீரபாண்டி போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் பள்ளிக்கு சென்று இரு தரப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் அறிவுரையும் வழங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், பள்ளி மாணவர்களின பெற்றோரை அழைத்து எழுதி வாங்கி உள்ளோம். மாணவர்களிடம் இருந்து சைக்கிள் செயின், கத்தி, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாணவர்களின் நடவடிக்கையை கண்காணித்து வருகிறோம் என்றார்.

Next Story
×