search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்.
    X
    அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்.

    திருச்செந்தூரில் 9-ந் தேதி பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 9-ந் தேதி திருச்செந்தூரில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    உடன்குடி:-

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

    தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, தொழில் வளர்ச்சி, விவசாயமேம்பாடு, பள்ளிக் கல்வி, உயர் கல்வி முன்னேற்றம், சுகாதார மேம்பாடு, அறிவுசார் துறை வளர்ச்சி, சுற்றுலா துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து உள்ளது. 

    கல்வி மற்றும் சுகாதாரம் இந்த அரசின் இரு கண்கள் என முதல்-&அமைச்சர் அறிவித்ததற்கு ஏற்ப பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

     விவசாய வளர்ச்சிக்காக தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

    மொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ள பட்ஜெட்டை விளக்கி வருகிற 9, 10&-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பட்ஜெட்டை விளக்கியும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற 9&-ந் தேதி மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு எதிரே எனது (அனிதா ராதா கிருஷ்ணன்) தலைமையில் நடக்கிறது. 

    கூட்டத்தில் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், தலைமைக் கழக பேச்சாளர் குடந்தை ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்சியில் மாநில,மாவட்ட நிர்வாகி கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், உறுப்பினர்கள், நகரசபை தலைவர்கள், உறுப்பினர்கள், பேரூராட்சி தலை வர்கள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×