என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஜயகாந்த்
தண்ணீர் பந்தல் அமைத்து மக்கள் தாகத்தை தணியுங்கள்- விஜயகாந்த் வேண்டுகோள்
அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென தொண்டர்களை விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோடைகாலம் துவங்கி இருக்கும் நிலையில் கோடையின் உச்சிவெயிலை நினைவுபடுத்தும் அளவிற்கு, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடை காலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும்.
ஆண்டுதோறும் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம். அதே போல் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சீரிய பணிக்கு என்றும் போல் எனது இதயமார்ந்த வாழ்த்துகள் உண்டு. இக்கோடைகாலம் முழுவதும் இப்பணியினை செயல்படுத்த வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு
Next Story