என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விவசாயிகள் போராட்டம்
  X
  விவசாயிகள் போராட்டம்

  ஒரு கிலோ சின்ன வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்று விவசாயிகள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது
  கோவை:

  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட தலைவர்  பழனிசாமி தலைமையில் மனு அளித்தனர். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

  கோவையில் தொண்டாமுத்தூர்,  வேடப்பட்டி, தேவராயபுரம், தென்னமநல்லூர், ஜாகீர் நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காய சாகுபடி அதிக பரப்பளவில் விவசாயிகள் செய்து வருகிறார்கள். 

  சின்ன வெங்காயம் 65 நாளில் இருந்து 70 நாட்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம். சின்ன வெங்காயம் ஏக்கருக்கு நான்கு டன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைத்து வருகிறது. சின்ன வெங்காயத்தின் உற்பத்தி செலவு ஒரு ஏக்கருக்கு 70 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். மேலும் இரண்டு ஆண்டுகளாக சின்ன வெங்காயத்தின் விலை போதுமான அளவு விற்பனை செய்து வந்த சூழ்நிலையில் தற்போது இரண்டு மாதங்களாக ஒரு கிலோ 8 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையாகிறது. 

  இதனால் விவசாயிகள் பொருளாதார சிக்கலான சூழ்நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.  கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து தற்போது விற்பனை விலை மிகவும் குறைந்து வருகிறது. தற்போது 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சுமார் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் இருப்பு வைத்திருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

  சின்ன வெங்காயத்தினை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் விலை பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்து  அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தது 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

  முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை  கழுத்தில் மாலையாக போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள்  சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
  Next Story
  ×