search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை சந்திப்பு பகுதியில் நாளை மின்தடை

    நெல்லை சந்திப்பு பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மின்வினியோகம் நகர்ப்புற பிரிவு செயற் பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 
    எனவே காலை 9 மணி முதல் 5 மணிவரை நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதியில் மின் வினியோகம் இருக்காது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×