search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்
    X
    திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்

    திருவள்ளூரில் புதிய குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி- கலெக்டர் தகவல்

    திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010ஆம் ஆண்டு குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது 2010ஆம் ஆண்டு முதல் 28- 2-2022 வரை உள்ள குடிசை வீடுகள் குறித்த விவரங்களை கணக்கெடுப்பு செய்திட அரசு அறிவுறுத்தியதின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 கிராம ஊராட்சிகளில் 2010ஆம் ஆண்டிற்கு பின் 28- 2- 20222 வரை ஊராட்சி வீட்டு வரி கேட்பு பதிவேட்டின் படி கூரை வேயப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் பணி நேற்று 4 ம் தேதி முதல் வருகின்ற 25-ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.

    எனவே குடிசை வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகள் தங்களது ஆதார் அட்டை எண் மற்றும் நிலம் தொடர்பான பட்டா மற்றும் இதர ஆவணங்களின் நகல்களை கணக்கெடுப்பு செய்ய வரும் அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர், தூய்மை பாரத இயக்க ஊக்குனர் ஆகியோரிடம் காண்பித்து பதிவுசெய்து கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×